
சட்ட விரோத மது, விற்பனை, நடவடிக்கையெடுத்த போலீசார்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையிலான தனிப்படையினர் கடந்த 01.07.2021 விளாத்திகுளம் காவல் நிலையத்துக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள அரசு டாஸ்மார்க் கடை அருகில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த A. குமாரபுரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் வேல்சாமி என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
