Police Department News

வேலைக்கு போக சென்ன காரணத்தால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர், செல்லூர் போலீசார் விசாரணை

வேலைக்கு போக சென்ன காரணத்தால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர், செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான வைத்தியநாதபுரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் பின்புறம் கோகுல்ராஜ் காம்பவுண்டில் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் ஜமால் மைதீன் மகன் அபுதாகீர் வயது 45/21, இவரது மனைவி அவ்வம்மாள்பேகம், மகன்கள் அனவர்ராஜா வயது 20/21, மற்றும் அசாரூதீன் வயது 17/21, ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் வில்லாபுரத்தில் விடியல் ரெக்ரியேசன் கிளப்பில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். முதல் மகன் அன்வர்ராஜா 10 வது வகுப்பு படித்து பாதியிலேயே நிறுத்தி விட்டு வீட்டில் சும்மா இருந்து வருகிறார். அவன் யாருடனும் சரியாக பேச மாட்டான் எந்த நேரமும் செல் போன் பார்த்து கொண்டிருப்பது வழக்கம், இளைய மகன் அசாருதீன் மதுரை கோரிப்பாளையத்தில் நாகூர் டிம்பர் கடையில் வேலை பார்த்து வந்தான், தற்போது கொரோனா காலமாக இருப்பதால் வருமானம் வேண்டி அன்வர்ராஜாவை ஏதாவது வேலை பார்க்கும்படி அவரது தந்தை கூறவே அவனும் சரி வேலைக்கு போகிறேன் என்று கூறிவிட்டு ஒரு வார காலமாக யாருடனும் சரியாக பேசாமல் இருந்து வந்தான் இந்த நிலையில் கடந்த 27 ம் தேதி அபுதாகீர் தன் மனைவி மற்றும் இளைய மகன் அசாரூதீன் ஆகியோருடன் மதுரை விளாச்சேரியில் தனது உறவினர் வீட்டு விசேசத்திற்கு சென்றுள்ளனர். திரும்பி மாலை சுமார் 5.15 மணியளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டு கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்தது அவர்கள் கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது தன் மூத்த மகன் அன்வர்ராஜா பேன் மாட்டும் கொண்டியில் சால்வைத்துணியால் தூக்குப் போட்டு தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் உடனே கதவை பலமாக தள்ளி உள்ளே சென்று தூக்கில் தொங்கிய அன்வரை கீழே இறக்கிப் பார்த் போது அவன் இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. உடனே தன்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லூர் காவல்நிலையம் வந்து நடந்த சம்பவத்தை புகாராக கொடுத்து,தன் மகனின் உடலை தங்களின் குல வழக்கப்படி நல்லடக்கம் செய்ய பெற்றுத்தரும்படி கேட்டுக் கொண்டனர் புகாரை பெற்றுக் கொண்ட காவல் சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.