புதிய வகை ரோந்து பணி: எஸ்.பி. துவக்கி வைத்தார்
தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல் மார்ஷல் என அழைக்கப்படும் இரு சக்கர வாகன புதிய ரோந்து பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த இருசக்கர வாகனத்தில் அவசர ஒலிப்பான், ஒளிரும் விளக்குகள், சிறிய ஒலி பெருக்கி ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் நகர் முழுவதும் போக்குவரத்து சீர் செய்யும் பணியில், சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் தூத்துக்குடி நகர்புறத்தில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியிலும், சாலை விபத்துக்களை தவிர்ப்பதும், சாலை விதிகளை மீறுபவர்கள் குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்வார்கள்.
இந்நிகழ்ச்சியில் நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், தென்பாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகணேஷ், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.