சமூக வலைதள பயன்பாட்டாளர்களுக்கு காவல்துறையினரின் ஒரு எச்சரிக்கை
பேஸ்புக், ட்வீட்டர்,இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சாதிய மோதலை உண்டாக்கும் விதமாக பதிவுகளை இடுவோர் கைது செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைதள பதிவுகளை கடந்த 2 மாதங்களாக தமிழ்நாடு காவல்துறை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறது. மே மாதம் முதல் நேற்று வரை அவதூறு கருத்துக்களை பதிவிட்ட 75 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அத்துடன் எல்லை மீறிய கருத்து , வீடியோ பதிவிட்ட 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.