தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் ரோந்து சென்றபோது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் மகேஷ் ராஜா (21), தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி சுனாமி காலனியைச் சேர்ந்த செட்டிபெருமாள் மகன் கர்ணன் என்ற பாம்பு கர்ணன் (21), தூத்துக்குடி கொமஸ்புரத்தை சேர்ந்தவர்களான முருகன் மகன் மாரிமுத்து (36), செல்வகுமார் மகன் மாரியப்பன் (20) மற்றும் முருகன் மகன் சஞ்சய்குமார் (21),
முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கமணிநகரைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் காளிமுத்து (21), குமாரவேல் மகன் விக்னேஷ் (21), தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர்களான நடராஜன் மகன் ரகு (35), செல்லம் மகன் லிங்கம் (52) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் மேற்படி 9 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ 800 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.