சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் அறிவுரைப்படி, சென்னை பெருநகர காவல்துறையில் கொரோனா நோய் தொற்று காலத்தில் அர்ப்பணிப்புடன் தன்னுயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு, முகக்கவசங்கள், திரவ சுத்திகரிப்பான், கையுறை உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கியும், , கொரோனா பரவாமல் தடுக்க கொரோனா விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டும் வரப்படுகிறது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு பெங்களூரில் இயங்கி வரும் Sillicon Valley Bank (SVB) நிர்வாகத்தினர், கொரோனா தொற்று காலத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றி வரும் சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு N95 முகக்கவசங்கள், கையுறைகள், திரவசுத்திகிரிப்பான், ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளிட்ட ரூ.3,000/- மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்க முன் வந்தனர்.
அதன் தொடக்கமாக, இன்று (24.7.2021), காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5,000 காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதின் அடையாளமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள், 15 காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு டாக்டர்.கலாநிதி வீராசாமி, வட சென்னை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் Sillicon Valley வங்கியின் இந்திய மனிதவள இயக்குநர் திருமதி.ஷாலினி பொடார் முன்னிலையில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்..
உடன், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் (நிர்வாகம்) திரு.மகேந்திரன், மேற்படி தனியார் வங்கி அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.