இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மூன்றாம் அலை துவங்கி விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து வெளிநாட்டு வாழ் தமிழ் மருத்துவர்களின் அறிவுரை.
முற்றிலும் வெளியே செல்லவே வேண்டாம். குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் கண்டிப்பாக போகவே கூடாது. மிக அத்தியாவசியம் எனில் நீங்கள் வெளியே செல்லும் போது, இரட்டை முகமூடி அணியவும். எந்த நேரத்திலும் வெளியே வைத்து முகமூடியை கழற்றவோ, தாடிக்கு மட்டும் பயன்படுத்தவோ கூடாது. உங்கள் வீட்டிற்கு வெளியே சாப்பிட வேண்டாம். உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு செல்லவே வேண்டாம்.
ஆனால் இதை பொதுமக்கள் மிகவும் இலகுவாகவே எடுத்துக் கொள்கிறார்கள். இப்போது நாம் முன்னெச்சரிக்கை எடுக்கா விட்டால், நம் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் அழிக்கப்படுவார்கள். கோவிட் பாகுபாடு காட்டாது. மரண வீட்டிற்கு செல்வதையும், திருமண வீட்டிற்கு செல்வதையும் அறவே தவிர்த்து விடுங்கள். அதன் மூலம் கோவிட் செயினை அறுத்து விடலாம். நீங்கள் இதனை உதாசீனப்படுத்தினால், நெருங்கி வரும் நாட்களில் தினசரி மரணம் தமிழ்நாட்டில் 500, 1000 என்று கட்டுக்கடங்காத நிலையில் அதிகரித்து கொண்டே செல்லும்.
மேலும் டாக்டர்கள் கை கட்டிப் பார்த்து கொண்டு தான் இருக்க முடியும். அது நம் சொந்தங்களாக இருக்கும் போது, எவ்வளவு கடுமையான வலியைத் தரும்? ஆகவே மீண்டும் சொல்கிறோம். கோவிட் நிபந்தனைகளை உதாசீனப்படுத்தாமல், முறையாக கடைப்பிடியுங்கள். நிலைமை கட்டுக்குள் வரும் வரை, அனைத்து நிகழ்வுகளையும் குறைந்தது மூன்று நான்கு மாதம் தள்ளிப் போடுங்கள். நாம் அனைவரும் முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே மூன்று அல்லது நான்கு மாதங்களில் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம்.
கனடா நாட்டில் உள்ளேயும், வெளியேயும் விமானங்களைத் தடை செய்கிறது. வருங்காலங்களில் இங்கும் தினசரி இறப்பு எண்ணிக்கை 1,000ஐ தாண்டும். ஆனால் அரசின் அபார உழைப்பினால் மருத்துவர்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். வளைகுடா நாடுகள் பெரும்பாலும் உள் வரும் மற்றும் வெளிச் செல்லும் விமானங்களை விரும்பாதது மட்டுமல்லாது, நிறுத்தியும் வைத்துள்ளது.
கோவிட்19ன் மூன்றாவது அலை, முதல் அலையை விட மிகவும் ஆபத்தானது. எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் எடுக்க வேண்டும். மூன்றாவது அலையிலிருந்து அனைவரையும் காப்பாற்றுங்கள். இரண்டாவது அலை போல இருக்கும் என்று நீங்களே தீர்மானிக்க வேண்டாம்.
1917-1919ம் ஆண்டின் ஸ்பானிஷ் காய்ச்சலை போலவே, மூன்றாவது அலை முதல் மற்றும் இரண்டாவது அலைகளை விட ஆபத்தானது என்று வரலாறு சொல்கிறது.
வரலாறு மற்றும் புள்ளியியல் பொய் சொல்லாது திரும்பிப் பார்ப்போம்.
[05/08, 18:58] CLUB Aruljothi Mathurai: திருமண்டபத்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த நகைகளை திருடிய இருவர் கைது.
கடந்த 2 ம் தேதி, திருநெல்வேலி டவுண்,பாட்டபத்து தெருவை சேர்ந்த ஆறுமுகம் வயது 37, என்பவர் சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்ட நகரம், மைமூன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது ஆறுமுகத்தின் மகள் கழுத்தில் இருந்த 10கிராம், செயினை காணவில்லை என்றதும் மண்டபத்தில் உள்ள CCTV கேமராவில் பார்த்துள்ளார், அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த சகாய நெல்சன் ராஜா வயது 35, மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி வயது 30 , இருவரும் கழுத்திலிருந்து செயினை பறித்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் செல்வி.மார்க்ரெட் தெரசா,அவர்கள், விசாரணை மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தார். மேலும் 10கிராம் தங்க செயினையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.