சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மனித நேயம் மற்றும் நல்லிணக்க கூட்டம் மதுரை மாவட்டம் திருமோகூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக காவல்துறை சரக துணைத் தலைவர் திருமதி.காமினி IPS.அவர்கள் கலந்து கொண்டு தலைமை வகித்தார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்கள் மற்றும் வேலை வாய்ப்பு துறை திரு.சுப்பிரமணியன் மண்டல இயக்குனர், மதுரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நல்லிணக்கம் குறித்தும் சமூகத்தில் ஒற்றுமையை பேணுதல் குறித்தும், ஜாதி ரீதியான உயர்வு தாழ்வுகளை களைவதற்கு அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து செயல்படவும் சமூக வேறுபாடுகளினால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புக்களையும் அதனால் ஒரு சமூகத்தில் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் குறித்து தெளிவாக விளக்கப்பட்டது.
மேலும் ஊமச்சிகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. காட்வின் ஜெகதீஷ் குமார், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சந்திரன், மற்றும் திரு. பாண்டி வட்டாச்சியர் திருமதி. தமிழ்செல்வி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை காவல் ஆய்வாளர் ஒத்தகடை, மற்றும் பலர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் திருமோகூர் ஊரை சேர்ந்த மாணவ, மாணவிகள் தொடர்ச்சியாக 10 மணி நேரம் சிலம்பாட்டம் ஆடியதற்காக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. காமினி IPS. அவர்கள், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.