Police Recruitment

மதுரை மாநகர காவல் துறையில் லஞ்சப் புகாரில் சிக்கும் போலீஸாருக்கு பணியிட மாற்றம்: தவறு செய்யும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயுமா?

மதுரை 

மதுரை நகரில் லஞ்சப் புகாரில் சிக்கும் போலீஸாரை வெளி மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை நகரில் 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரி கின்றனர். காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டும், அவர்கள் தரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், புகார்தாரர்களை அலைக்கழிக்கக் கூடாது, லஞ்சம் பெறக் கூடாது, சமரசம் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடக் கூடாது என போலீஸாருக்கு காவல் ஆணை யர், காவல் துணை ஆணையர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில், சமீப த்தில் ரோந்து பணியின்போது லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் அவனியாபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 3 போலீஸாருக்கு கட்டாய ஓய்வு அளித்து, காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் அவனியாபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த மேலும் 4 போலீஸார் தற்போது மத்திய மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. லஞ்சப் புகார் காரணமாகவோ அல்லது சமீபத்தில் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் இறந்த விவகாரம் தொடர்பாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை போலீஸார் மீது புகார் வந்தால், பொதுவாக தென் மண்டலத்திலுள்ள காவல் நிலையங்களுக்குத்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தனர். தற்போது மத்திய மண்டல காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கையாக பார்க்கப் படுகிறது.

இது குறித்து போலீஸ் வட்டா ரத்தில் கூறப்படுவதாவது: லஞ்சப் புகாரில் சிக்கும் போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பது சரியானதுதான். அதேநேரம், ஒருசில காவல் நிலையம், உதவி ஆணையர், துணை ஆணையர் அலுவலகங்களில் பணிபுரியும் போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டால்கூட, மாற்றுப்பணி என்ற பெயரில் அதே அலுவலகம் அல்லது காவல்நிலையத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, லஞ்சப் புகாரில் சிக்காமல், சொந்த பிரச்சி னைகளில் சிக்கும் போலீஸார் கூட முறைப்படி விளக்கம் கேட் கப்படாமல் அதிரடியாக பிற மண்ட லங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். திடீரென குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால் போலீஸார் சிரமப்படுகின்றனர்.

காவல் நிலையங்களை கண் காணிக்கும் நுண்ணறிவு பிரிவினர், தவறு செய்யும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. போன்ற அதிகாரிகளைவிட, காவலர்கள் மீதான புகார்களையே பெரும்பாலும் ஆணையரின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். அதிகாரிகள் மீதான புகார்களையும் ஆணையரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.