கேரளாவில் இன்று திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொரோனா அச்சுருத்தலுக்கிடையில் கேரளா, கன்னியாகுமரியில் கொண்டாட்டம் களைகட்டுகிறது.
ஆவணி மாதம் அஸ்தம் நாளில் ஓணம் கொண்டாட்டம் துவங்கும், ஆனால் இந்த ஆண்டு ஆடி அஸ்தத்தில் துவங்கி, இன்று திருவோணம் கொண்டாடப்படுகிறது. மூன்றடி நிலம் தருவதாக விஷ்ணு பகவனுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றுவதற்காக தன் தலையை கொடுத்து மண்ணுக்குள் அமிழ்ந்து போன மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு தினசரி 22 ஆயிரத்தை தாண்டிவரும் நிலையிலும் அரசு தளர்வுகளை அளித்து இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கட்டுப்பாடுகள் இருந்தாலும் மக்கள் அதையெல்லாம் மறந்து பண்டிகையை கொண்டாடுகின்றனர், கடைகளிலும், தெருக்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது, மலர்களால் அமைக்கப்படும் அத்தப்பூக்களம் எல்லா இடங்களிலும், காணப்படுகிறது.
இதற்காக நேற்று தோவாளை மலர் சந்தையில் இருந்து ஏராளமான மலர்கள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகான இதனால் பூ விலை நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதிகமனது. கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் ஓணம் களைகட்டியுள்ளது, இன்று இங்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அய்யப்பன் விக்ரகத்தில் மஞ்சள் துண்டு அணிவிக்கப்பட்டு, இன்று திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்களுக்கு பாயாசத்துடன் கூடிய ஓணம் விருந்து அளிக்கப்பட்டது.