ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக நூதன மோசடி !
அரசு பள்ளி ஆசிரியர் உட்பட நான்கு பேர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக பல கோடி ரூபாய் நூதன மோசடி!
விழுப்புரம் மாவட்டம் ஆலங்குடி சேர்ந்த பிரகாஷ் ஒருசில நண்பர்களால் பழக்கத்தின் அடிப்படையில் அறிமுகமானவர்கள் பிரகாஷ் இடம் எங்கள் நிறுவனம் மூலம் பல இடங்களில் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் செய்து வருவதாகவும் அதில் பல கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் ஆகையால் தங்களுக்கு தெரிந்தவர்கள் இந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஒரு நபர் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் போதும் அந்த நபருக்கு மாதம்தோறும் 18 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர் .
இந்த ஆசை வார்த்தைகளை நம்பி பிரகாஷ் தனது தெரிந்த 25 நண்பர்களை அந்நிறுவனத்தில் சேர்க்க அவர்களிடம் வசூல் செய்த 2 கோடியே 63 லட்சம் ரூபாய் வசூல் செய்த பணத்தில் கவியரசன் ,கௌசல்யா ,ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் 60 லட்ச ரூபாய் செலுத்தி மீதமுள்ள இரண்டு கோடி மூன்று லட்சத்தை பணமாக கௌசல்யாவின் வீட்டிற்கு நேரில் சென்று பிரகாஷ் கொடுத்துள்ளார். அங்கு சக்திவேல் கௌசல்யா ராமசாமி கவியரசன் நான்கு பேரும் பணத்தை பெற்றுக்கொண்டு மாதமாதம் 26 நபர்களுக்கும் 18 ஆயிரம் ரூபாய் பணம் வங்கி கணக்கில் வந்துவிடும் என்று சொல்லியுள்ளார்கள்.
இதை நம்பி பிரகாஷ் பணத்தை கொடுத்துவிட்டு வந்து விட்டார் .
அவர் பணம் கொடுத்த அடுத்த மாதத்திலிருந்து எந்த வித பணமும் வங்கி கணக்கில் வரவில்லை என்று பணம் கொடுத்த 25பேரும் கௌசல்யா சக்திவேல் கவியரசன் ராமசாமி 4 பேரையும் தொடர்பு கொண்டு கேட்டபோது சரியான பதில் சொல்லாமல் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டும் தோணியில் பேசி உள்ளார்கள்.
பணத்தைப் பறிகொடுத்த அந்த 25 பேரும் செய்வதறியாது காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காவல்துறையினர் தலைமறைவாக இருந்த கௌசல்யா ராமசாமி சக்திவேல் மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அவர்களுடன் இருந்த கவியரசு தலைமறைவாக உள்ளார். அவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.