Police Department News

சொத்து தகராறில் அண்ணன், தம்பி அடிதடி, கூடல்நகர போலீசார் விசாரணை

சொத்து தகராறில் அண்ணன், தம்பி அடிதடி, கூடல்நகர போலீசார் விசாரணை

மதுரை, கூடல்புதூர் D3, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான புது விளாங்குடி, சக்திநகர், துளசி தெருவில் வசித்து வருபவர் ஜெயகுமார் மனைவி பகவதி வயது 47/21, இவரது கணவர் ஜெயகுமார் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பிரிமியர் பஞ்சாலையில், சூப்ரவைசராக வேலை பார்த்து வருகிறார். இவரதுதந்தை சுப்ரமணியபிள்ளை கடந்த 18 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு மதுரை விளாங்கு, நெடுஞ்செழியன் தெருவில் இரண்டு வீடு இருந்தது. அதை 10 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணன், ஜெயகுமார் ஒரு வீட்டையும், தம்பி ராஜ்குமார் ஒரு வீட்டையும் பாகம் பிரித்து கொண்டு இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அண்ணன் ஜெயக்குமாருக்கு வீட்டின் மேல் கடன் இருந்ததால் வீட்டை விற்க்க முயற்சி செய்யும் போது தம்பி ராஜ்குமார் அந்த வீட்டை வாங்கி கொள்ளுவதாக சம்மதித்து 28, 50,000 விலை பேசி முன் பணம் 7,75,000 கொடுத்து விட்டு மீதப் பணத்தை சிறுது, சிறுதாக தருவதாக கூறியுள்ளார், ஆனால் பேசியபடி தராததால் வீட்டை வேறு நபருக்கு விற்க முயற்சி செய்து வந்தார் இந்த நிலையில் தனது வீட்டின் ஒரு பகுதியை கவிதா என்பவருக்கு வாடகைக்கும் இன்னொரு பகுதியை ஒத்திக்கும் விட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 14 ம் தேதி வாடகைப் பணம் வாங்க சென்றபோது கவிதா என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்த வீட்டை அவரை காலி செய்து விட்டு தம்பி குடியிருந்துள்ளார். இதை தட்டி கேட்ட அண்ணணை தம்பியும் அவரது மனைவியை சரமாரி தாக்கியுள்ளனர் இதனால் அண்ணன் ஜெயகுமார் கூடல்புதூர் D3, காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார் புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் ஆறுமுகம் அவர்களின் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு.A. செந்தில்குமார் அவர்கள் விசாரணை நடந்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.