மதுரை மாநகரில் ஷேர் ஆட்டோக்களின் விதி மீறல்களை கட்டுப்படுத்தி வரும் போக்குவரத்து காவலர்கள்
மதுரை மாநகரில் ஷேர் ஆட்டோக்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் கூடி வரும் நிலையில் அவர்களின் விதி மீறல்களும் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்த எவ்வளவோ முயற்சிகள் கடுமையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்ட போது இவர்களது விதி மீறல் பெரிய சவாலாக இருந்து வருகிறது, இவர்களுக்கு கிடைக்கும் 15, 20 ரூபாயிக்காக கண்ட இடங்களில் ஆட்டோவை நிறுத்துவது, கஸ்டமரை பிடிப்பதற்காக வேகத்தை கூட்டி மக்களின் உயிரோடு விளையாடுவது சர்வசாதாரணமாக நடந்து வரும் வேலையில் இவர்களை கட்டுப்படுத்த சில முக்கிய பகுதிகளில் ஆட்டோக்களை நிறுத்துவதற்கும், சிட்டி பஸ் போக்குவரத்திற்கு பொது மக்களுக்கு இடையூறு இல்லாமலும், இந்த ஷேர் ஆட்டோக்கள் இயங்க போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் டெம்பிள் சிட்டி ஓட்டல் பகுதியில் இந்த ஆட்டோக்கள் நிறுத்த அந்த பகுதி ஆய்வாளர் திரு சுரேஷ் அவர்கள், மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.செ்லப்பாண்டி அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார். மற்றும் கோரிப்பாளையம் பனங்கல் ரோட்டில் அரசு மருத்துவ மனை பகுதியில் இந்த ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்தை தடை செய்து செனாய் நகர் பகுதியில் மாற்றுப் பாதையில் செல்ல ஆய்வாளர் திரு சுரேஷ் அவர்கள் மற்றும் பூர்ணகிருஷ்ணன் அவர்கள் ஏற்பாடுகள் செய்து போக்கு வரத்து சீர் செய்து வருகிறார்கள், இந்த நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.










