மேலூர் அருகே ஏழைகாத்த அம்மன் கோவில்பட்டியில் பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை
கோவில்பட்டியை சேர்ந்த ராசு என்பவரின் மருமகள் லட்சுமிக்கு வெள்ளலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ள படியால் வீட்டில் உள்ள அனைவரும் மருத்துவமனையில் தங்கியுள்ளனர் இந்நிலையில் 17- 09-21 தேதி காலை வாதியான ராசு அவரது வீட்டை பூட்டி விட்டு வெள்ளலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பின்பு மதியம் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த சுமார் 13 சவரன் தங்க நகைகள் திருடு போய் இருந்தது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராசு போலீஸ்க்கு கொடுத்த தகவலின் பேரில் மேலூர் டிஎஸ்பி அவர்கள் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் அவர்கள் மற்றும் கீழவளவு சார்பு ஆய்வாளர் பாலமுருன் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தும் மதுரையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு மேலூர் குற்றப்பிரிவு போலீசார் மேற்படி நகை திருட்டுடில் ஈடுபட்டவர்களை தேடிவருகிறார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது