Police Department News

02.10.2021 தமிழ்நாட்டை கலக்கிய பிரபல கார் திருடன் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு) அவர்களாலும் அவருடைய குழுவினராலும் கைது செய்யப்பட்டான்.

02.10.2021
தமிழ்நாட்டை கலக்கிய பிரபல கார் திருடன் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு) அவர்களாலும் அவருடைய குழுவினராலும் கைது செய்யப்பட்டான்.

சென்னை பெருநகர காவல் அடையாறு மாவட்டம் அடையாறு சரகம் சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எல் .பி ரோடு சாலையில், திரு. குருசாமி ராஜா என்பவர் கடந்த 25. 8. 2021-தேதி தனது Renault Kwid காரை சாவியுடன் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றபோது வாகனம் திருடு போனதாக கொடுத்த புகாரின் பேரில் ஜே5 சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படையினர் எதிரியை தேடி வந்தனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு சந்தேக நபரின் புகைப்படம் கிடைக்கப்பட்ட தன் பெயரில் அவரே குறித்து விசாரிக்க அவர் மீது ஏற்கனவே நீலாங்கரை, வடபழனி ,அம்பத்தூர் , ஆகிய காவல் நிலையங்களில் கார் திருடிய வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் 10.09.2020 ஆம் தேதி தேனாம்பேட்டை பகுதியில் திரு. மோகன் என்பதுடன் வீட்டு வேலைக்கு சேர்ந்து அவரிடமிருந்த i10 Grand காரை திருடிச் சென்றுள்ளார்.22.09.2021 ம் தேதி கோவை, பீளமேடு பகுதியில் இரவில் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்ந்து அன்றைக்கு Tata Ace வாகனத்தை திருடிச் சென்றுள்ளார்.
தொடர் திருட்டில் ஈடுபடும் மேற்படி நபரை பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர், தெற்கு மற்றும் இணை ஆணையர், தெற்கு மண்டலம் அவர்களின் உத்தரவின் பேரில் துணை ஆணையர், பொறுப்பு, அடையாறு காவல் மாவட்டம் திரு. மகேந்திரன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் சாஸ்திரி நகர் காவல்நிலைய குற்ற பிரிவு ஆய்வாளர் திரு. ராஜாராம் தலைமையில் தலைமை காவலர்கள் திரு. சுப்பிரமணி, திரு. சதீஷ்குமார் திரு .ஜானி விஜி திரு .சண்முகானந்தம் திரு. கிரி முதல் நிலை காவலர்கள் திரு .மகேஸ்வரன் பிள்ளை திரு. பன்னீர் ராஜ்குமார் திரு .லோகநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு தமிழ்நாடு முழுதும் சென்று அவனது நடவடிக்கைகளை கண்காணித்து இன்று 2 10 2021 ம் தேதி தகவலின் அடிப்படையில் மேற்படி எதிரி ஏழுமலை த/பெ ஆறுமுகம் , கன்னியாகுமரி மாவட்டம் என்பவரை கைது செய்து இரண்டு கார்களும், ஒரு Tata Ace வாகனமும் செங்கல்பட்டு சென்று கைப்பற்றப்பட்டன. விசாரணையில் அவர் போலியான ஆவணங்கள் கொடுத்து வீட்டு வேலைக்கு சேர்வதும் போலியான ஆவணங்கள் மூலம் பல சிம்கார்டுகள் மாற்றிக் கொள்வதும், அவருக்கு எந்த நிரந்தர முகவரியும் இல்லாததால் திருடிய வாகனங்களை விற்று தமிழ்நாடு முழுவதும் மணிகண்டன், தேவா, மாதவன், ஜெகன், யுவராஜ் ,சிகாமணி என்ற பல போலியான பெயர்களில் வீடு மற்றும் கம்பெனிகளுக்கு வேலைக்கு சேர்ந்து வாகனங்களைத் விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் எனவும் விசாரணைகளில் தெரிய வருகிறது. மேலும் வாகனங்களை திருடிய நபரை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விடா முயற்சி மேற்கொண்டு தமிழக அளவில் வாகனத்திற்கு ஈடுபட்ட நபரை கைது செய்து வாகனங்களை கைப்பற்றிய தனி படையினரை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
குறிப்பு.
1.திருடியது _
25 கார்களுக்கு மேலாக
2.Tata Ace சிலவகை
3.பூந்தமல்லி காவல் நிலைய மூலம் குண்டாசில் சிறைக்கு சென்றவன்.

Leave a Reply

Your email address will not be published.