Police Department News

சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம்..! ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ரவி ஆகியோர் விரைவில் பொறுப்பேற்பு

சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம்..! ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ரவி ஆகியோர் விரைவில் பொறுப்பேற்பு

சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடியில் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 13 ம் தெரிவித்திருந்தார். 3-ஆகப் பிரியும் சென்னை போலீஸ், கமிஷனர் பதவிகளுக்கு சீனியர் ஐபிஎஸ்-கள் கடும் போட்டி நிலவி வந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறை 3ஆக பிரித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அண்மையில், சென்னையில் உள்ள தாம்பரம், ஆவடி பகுதிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடியில் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 13ம் தேதி அறிவித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை பரப்பு அரக்கோணம் வரை நீட்டித்து கடந்த அதிமுக அரசு அறிவித்தது. ஆனால், மிகப் பெரிய மாநகராட்சியை ஒரே மாநகராட்சியாக நிர்வகிப்பது கடினமானது. அதனால், சென்னை மாநகராட்சியை 3ஆக பிரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று சென்னை மாநகராட்சி பிரிப்ப்தற்கான காரணங்களாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாம்பரம், ஆவடி மாநகராட்சி உருவாக்கப்பட்டதும் அதற்கான காவல்துறை வரையறைகளும் செய்யப்பட வேண்டும். அந்தந்த மாநகரங்களுக்கு என தனியாக போலீஸ் கமிஷனர் நியமனம் செய்யப்பட வேண்டும். நூற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை மாநகர காவல்துறை அதனால்தான் 3ஆக பிரிக்கப்படுகிறது. சென்னை மாநகர காவல்துறை என்பது மிகப் பரந்த எல்லையைக் கொண்டுள்ளது. வடக்கே மணலியில் தொடங்கி, தெற்கே வண்டலூர் வரையிலும், மேற்கே நசரத்பேட்டையில் தொடங்கி கிழக்கே ஈ.சி.ஆர் மாயாஜால் வரையிலும் சென்னை பெருநகர காவல்துறையின் எல்லை மிகப் பெரிய அளவில் பரந்து விரிந்து கிடக்கிறது.

தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லையில், மொத்தம் 12 காவல் மாவட்டங்களும் அதன்கீழ் 135 காவல் நிலையங்கள் இருக்கின்றன. சென்னையில் நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப காவல் நிலையங்களும் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டியிருக்கிறது. அதனால், அதிக எண்ணிக்கையிலான காவல் நிலையங்களை நிர்வகிப்பது சென்னை காவல்துறைக்கு கண்டிமானதாக மாறிவிடும். அதனால்தான், சென்னை பெருநகர காவல்துறை எல்லையை மாநகராட்சிகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரித்து ஆவடியிலும் தாம்பரத்திலும் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்பட உள்ளது.

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் குரோம்பேட்டை, அடையாரின் சில பகுதிகளும் செங்கல்பட்டு காவல் எல்லையிலிருந்து கூடுவாஞ்சேரி ஆகிய காவல் மாவட்டங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு தாம்பரம் காவல் ஆணையரகம் உருவாக்கப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சென்னை விமான நிலைய காவல் எல்லையையும் தாம்பரம் ஆணையரகத்துடன் இணைக்கலாமா என்று ஆலோசனை நடைபெறுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே போல, அம்பத்தூர், பூந்தமல்லி, அண்ணாநகர் காவல் மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில காவல் நிலையங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு ஆவடி மாநகர காவல் ஆணையரகம் உருவாக்கப்பட உள்ளதாகவும் அதற்கான எல்லைகளைப் பிரிப்பதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழு அமைக்கப்பட்டு பணி விரைவுபடுத்தப்பட்டு வருகிறது” என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்

தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல் ஆணையராக ஏடிஜிபி ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவம் ஆணையராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள சந்தீப் ராய் ரத்தோர், மற்றும் ரவி ஆகியோர் திறமையான அதிகாரிகள் ஆவார். இவர்கள் பணியாற்றிய பகுதிகளில் ரவுடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பொதுமக்களுக்கு உற்ற நண்பனாக விளங்கி சிறப்பாக பணியாற்றியவர் என்ற பெருமை உண்டு.

நேர்மையான மற்றும் திறமையானவர்களுக்கு உரிய மரியாதை வழங்கிவரும் அரசு தற்போது ஆவடி தாம்பரம் ஆகிய மாநகர பகுதிகளுக்கு நேர்மையான காவல் அதிகாரிகளை நியமித்தது அனைத்து தரப்பு மக்களும் மற்றும் பல்வேறு அமைப்பினர் தமிழக முதல்வருக்கும் தமிழக அரசிற்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.