Police Department News

மதுரை மாநகரில் ரவுடிகளை அடக்கிய ஆப்ரேஷன் டிஷ்ஆம், மாநகர காவல்துறையினரின் நடவடிக்கை

மதுரை மாநகரில் ரவுடிகளை அடக்கிய ஆப்ரேஷன் டிஷ்ஆம், மாநகர காவல்துறையினரின் நடவடிக்கை

மதுரை மாநகரில் ரவுடிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், முன் விரோத குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டும் 23/09/21ம் தேதி முதல் 28/09/21 ம் தேதி வரை மதுரை மாநகர காவல் துறையினரால் ஆப்ரேஷன் டீஸ்ஆம் எனும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது, அதில் 1157 சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளிகளின் வீடுகள் மற்றும் இருப்பிடங்களில் தேடுதல் வேட்டை மேற்கொண்டு முக்கிய குற்ற வழக்குகளில் தொடர்புடைய 41 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 20 வாள், 24 கத்தி, 5 அரிவாள் உள்பட மொத்தம் 49 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்து அவர்கள் படைக்கலன் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படகடனர்.

மேலும் நடப்பாண்டில் 1250 குற்றப் பின்னனி உடைய நபர்கள் மற்றும் குற்றவாளிகளிடம் பிரிவு 107, 109, 110, குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு அதில் நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 108 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றும் 48 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப் பட்டனர்.

மேலும் தேடுதல் வேட்டையின் தொடர்ச்சியாக கத்தி, வாள், வீச்சருவாள் ஆகிய ஆயுதம் தயாரிக்கும் இடங்கள், மற்றும் தயாரிப்பாளர்கள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு காவல் சரகத்திலும் கூட்டம் நடத்தப்பட்டு பட்டரை, மற்றும் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் ஆயுதம் வாங்க வருவோரின் பெயர், விலாசம், மற்றும் என்ன காரணத்திற்காக வாங்குகிறார்கள் என்ற விபரங்களை பதிவேடுகளில் பதிய வேண்டும் எனவும் அடையாளம் தெரியாதவர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.