Police Department News

சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக, தமிழகத்தில் 3 மாதங்களில் 55 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து டிஜிபி அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக, தமிழகத்தில் 3 மாதங்களில் 55 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து டிஜிபி அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் தீவிர மதுவிலக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. உள்ளூா் போலீஸாரும், மதுவிலக்குப் பிரிவு போலீஸாரும் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் விளைவாக கடந்த 3 மாதங்களில் சட்டவிரோத மது விற்பனைத் தொடா்பாக 55,406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,613 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அவா்களிடமிருந்து ரூ.1.09 கோடி மதிப்புள்ள 2,73,256 லிட்டா் கள்ளச்சாராயம், ரூ.70.43 லட்சம் மதிப்புள்ள 4,69,559 லிட்டா் சாராய ஊறல்கள், ரூ.32.86 லட்சம் மதிப்புள்ள 32,866 லிட்டா் எரி சாராயம், ரூ.8.41 கோடி மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 3,309 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோத மது விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்ட 104 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். விழாக்காலம் நெருங்கி வருவதால் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க காவல்துறை நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்த உள்ளது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.