Police Department News

தூத்துக்குடியில் வீர வணக்க நாள் அனுசரிப்பு

தூத்துக்குடியில் வீர வணக்க நாள் அனுசரிப்பு

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.

கடல் மட்டத்திலிருந்து பதினாராயிரம் அடி உயரத்தில் அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூர்கிறோம். கடற்கரையானாலும், பனிமலை சிகரமானாலும், காவலர் பணி இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளை உன் விடியலுக்கு இன்று நான் மடியத்தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மைவிட்டு பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 377. மடிந்த இவர்கள் விட்டு சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதிபூண்டு, அவர்களின் வீரத்தியாகம் வீண் போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தலைமையிட கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றபிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், டி.எஸ்பி.கள் கணேஷ், சந்தீஸ், ஏ.எஸ்.பி.கள் ஹர்ஷ் சிங், வெங்கடேசன், கண்ணன், சங்கர், உதயசூரியன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், ஆயுதப்படை கண்ணபிரான், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ்குமார், ஷாமளாதேவி, பவித்ரா, காவல் ஆய்வாளர்கள் சுடலைமுத்து, ஆனந்த ராஜன், ஜெயப்பிரகாஷ், முருகன், ஜெயசீலன், ஜெயந்தி, ராதிகா, போக்குவரத்துப்பிரிவு மயிலேறும்பெருமாள், அனைத்து மகளிர் காவல் நிலையம் வனிதா, ஆயுதப்படை உதவி ஆய்வாளர் நங்கையர் மூர்த்தி உட்பட காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.