மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதேபோல் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
மதுரை மாவட்ட காவல் நிலையத்தில் கடந்த 30.8.2021ஆம் தேதி உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தான் தனது முகநூல் பக்கத்தில் முகமது ஆசிம் என்ற முகநூல் கணக்கில் இருந்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்ததை ஏற்று பின் தன்னுடைய வாட்ஸ்அப் எண்ணை கொடுத்து இருவரும் பேசி வந்துள்ளார்கள். இந் நிலையில் எதிரிதான் விஜய் டிவியில் சீரியல் ஆக்டர் ஆக இருந்து தற்போது சன் டிவியில் பூவே உனக்காக சீரியலில் நடித்து வருவதாக கூறி அவசரமாக பணம் வேண்டும் என்று கூறி ரூபாய் 2 லட்சத்து 56 ஆயிரத்து 500 வரை கடனாகப் பெற்று ஏமாற்றிவிட்டு எதிரி தன்னுடைய போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டதாகவும் நடவடிக்கை எடுக்க கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.
மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் திரு. மணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் பிரிவு அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திருமதி சார்மிங் எஸ்.ஒஸ்லின் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை திருவொற்றியூர் சென்னை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவரின் மகன் சந்தோஷ் ராஜா மற்றும் சந்தோஷ் ராஜாவின் மனைவி சித்ரா ஆகியோரை 26.10.2021 ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கவும் சைபர் குற்றங்களால் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் அது குறித்து அச்சமின்றியும் தயக்கமின்றி காவல்துறையினரை அணுகி புகார் அளிக்கலாம் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.