Police Department News

26.10.2021 மாலை 6.00 மணியளவில் ECR VGP GOLDEN BEACH சாலையில் கொரோனா 3வது அலை பற்றிய விழிப்புணர்வு J8 நீலாங்கரை போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைப்பெற்றது.

26.10.2021 மாலை 6.00 மணியளவில் ECR VGP GOLDEN BEACH சாலையில் கொரோனா 3வது அலை பற்றிய விழிப்புணர்வு J8 நீலாங்கரை போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைப்பெற்றது.

திரு.ஹிட்லர்
(போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையளர் (அடையார் உட்கோட்டம் ) அவர்கள் தலைமையில் மற்றும்
J 8 நீலாங்கரை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.குமார் அவர்கள் முன்னிலையில் மற்றும் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர்திரு .பரசுராமன் ,போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் மற்றும் தலைமை காவலர்கள் சார்பாக வி.ஜி.பி கோல்டன் பீச் சாலையில் மக்களுக்கான உயிர் பாதுகாப்பு கருத்தில் கொண்டு மூன்றாவது அலை கொரோனா பற்றிய விழிப்புணர்வை VIJAY TV புகழ் MIMIKRY CINE ARTIST SINGER MR.L.R நாகராஜ் அவர்கள் கொரோனா பற்றிய பாடலைபாடி திரு.கிருஷ்ணன் குழுவினரின் கலை நிகழ்ச்சியான தாரை தப்பாட்டம் முழங்க பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களை இருக்கையில் அமரவைத்து ஒவ்வொருவருக்கும் முக கவசம், சானிடைசர் கொடுத்து பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கபடியும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு சுத்தம் செய்யும் படியாகவும் , J8 நீலாங்கரை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு குமார் அவர்கள் பொதுமக்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் அரசாங்க உத்தரவுபடி ஒவ்வொருவரும் முக கவசம் சமூக இடைவெளி சானிடைசர் பயன்படுத்தவும் மற்றும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் உணவு முறையை சரியாக பின்பற்றவும் உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சி செய்யவும் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக அன்பாக மக்களிடம் பேசி கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அங்கு அமர்ந்திருந்த பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து காவல்துறை சார்பாக நடைபெற்ற முகாமை பாராட்டியும் நன்றியும் தெரிவித்தனர். பின்பு கொரோனா விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் j8 நீலாங்கரை போக்குவரத்து காவல்துறை சார்பாக நன்றியை தெரிவித்து நிகழ்ச்சியை சிறப்பாக இனிமையாக நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.