விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணைப் பற்றி அவதூறாகவும் ஆபாசமாகவும் செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா ஆலங்குளம் வசந்தம் நகர் சாந்தி இல்லம் என்ற முகவரியில் வசித்து வந்தவர் வாதி அவர்கள்
கடந்த 2020 டிசம்பர் மாதம் முதல் 2021 ஜூன் வரை மதுரை மாவட்டம் ய.ஒத்தக்கடை அன்னை நகரில் உள்ள ஐயப்பன் நகர் முதல் தெருவில் தனது தோழியான கண்ணகி அவர்களின் வாடகை வீட்டில் தனது இளைய மகள் திவ்யதர்ஷினி உடன் வசித்தார் அப்போது இவரது தனிப்பட்ட புகைப்படம் மற்றும் அவரது கணவரின் புகைப்படத்தினை பயன்படுத்தி சமூக வலைதளமான YouTube channel-ல் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சுகந்தி மற்றும் கவிதா என்ற ராமதாஸ் ஆகியோர் அசிங்கமாக சித்தரித்ததாகவும், வாதி தனது விவாகரத்து வழக்கு சம்பந்தமாக செல்வா என்பவரிடம் பேசிய உரையாடலை ஆபாசமாக கேவலமான வார்த்தைகளால் எழுதி வாதியை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் இதனால் பாதிக்கப்பட்ட வாதி கணவருடன் கருத்துவேறுபாடு காரணமாக அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தற்போது நிலுவையில் இருந்து வருகிறது,,
மேலும் வாதியை பல் வேறு பெண்கள் YouTube channel- ல். ஆபாசமாக வெளியிட்டு வருவதால், மேற்படி நபர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 1 வருடமாக YouTube channel-ல் வாதியைப் பற்றியும் அவரது கணவரை பற்றியும் எந்தவித ஆபாச உரையாடல் மற்றும் ஆபாச படங்களை வெளியிடாமல் இந்த தகவல் தற்போது கடந்த சில நாட்களாக வாதியைப் பற்றி செய்திகள் வெளியாகி வந்தது, Madurai silver official ( ஈரோடு கேப்டன்) suganthi official bala bala. ஆகிய YouTube channel நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்த மனு மீது மதுரை மாவட்டம் ஒத்தகடை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் மேற்படி வழக்கு சம்மந்தமாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையின் பிரகாரம் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மறு வழக்கு (re-registered) பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
இவ்வழக்கின் புலன் விசாரணையை மேற்கொண்டதில் சுகந்தி வயது 30 த/பெ ராஜு , நாகலாபுரம் தேனி மாவட்டம் என்பவரை இன்று 06.11.2021 அவரது வீட்டின் முன்பு வைத்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சமூக வலைத்தளங்களில் இது போன்று பிறர் மனம் புண்படும் படியாக பதிவுகளை பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி பாஸ்கரன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.