Police Department News

10.11.2021 சென்னை காவலர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று மழைநீரை அகற்றவும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார்.

10.11.2021
சென்னை காவலர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று மழைநீரை அகற்றவும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய 13 சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுக்கள் (Greater Chennai Police Rescue Team) அமைக்கப்பட்டு, 12 காவல் மாவட்டங்களிலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினருடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் காவல் அதிகாரிகளுடன் இன்று (10.11.2021), பூந்தமல்லி நெடுஞ்சாலை, G-3 கீழ்பாக்கம் காவல் நிலையம் பின்புறமுள்ள, கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு சென்று, அங்குள்ள காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கான குடியிருப்புகளை பார்வையிட்டார். மேலும், அங்கு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டதின்பேரில், மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், காவலர்களின் குடும்பத்தினருக்கு உணவு பொட்டலங்கள், ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் மற்றும் Emergency Light உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம், காவலர்களின் குடும்பத்தினர் தெரிவித்த குறைகளை கேட்டறிந்து அவற்றை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி உறுதியளித்தும், துரித நடவடிக்கை மேற்கொள்ளஉத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது, கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) மருத்துவர் N.கண்ணன், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் திரு.S.ராஜேந்திரன், இ.கா.ப., கீழ்பாக்கம் துணை ஆணையாளர் திரு.R.கார்த்திக்கேயன், இ.கா.ப., மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published.