Police Department News

பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம், பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப்பணி .

பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம், பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப்பணி .

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 5000 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இதில் மக்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும் பிளாஸ்டிக் ரப்பர் போன்ற குறிப்பிட்ட அளவு மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள குப்பைகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் கரை ஒதுங்கியது. இதை கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரரான உர்பசேர் சுமித் நிறுவனம் மூலம் பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்ய திட்டமிட்டு 11 .11. 2021 அன்றுவரை 270 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும் இன்று 12.1 2. 2021 அன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசு தனியார்துறை ஊழியர்கள் அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு மண்டலங்களை சேர்ந்த குடியிருப்போர் நல சங்கங்களுடன் இணைந்து தீவிர குடிமைப்பணி நடைபெற்றது.
இந்நிகழ்வில் 3000 பேர் கலந்து கொண்டு அவர்களின் மூலம் 75 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டது.
மேலும் கடற்கரையில் இருந்து அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மாணவர்களுக்கு அரசு முதன்மை செயலாளர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.சுகன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் சுகாதாரம் டாக்டர் எஸ் மனிஷ் இ.ஆ.ப. அவர்கள், தெற்கு வட்டார துணை ஆணையாளர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன் இ.ஆ.ப.உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மெஹ்மூத் செயல் , மேலாண்மை இயக்குனர் ராவல் மார்டினெஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.