Police Department News

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள் ரூபாய் 23 லட்சம் நிதி உதவி.

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள் ரூபாய் 23 லட்சம் நிதி உதவி.

உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதி 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர்கள் அவர்கள் பேட்சில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து போலீஸ் நண்பர்கள் காக்கி உதவும் கரங்கள் என்ற குழுவை ஏற்படுத்தி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள் இந்த குழுவில் உள்ள தங்களது நண்பர்கள் யாரேனும் இறக்கும் பட்சத்தில் அவருடைய இழப்பை ஈடு செய்யும் விதமாக நிதி திரட்டி இறந்த நண்பரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அப்பன்திருப்பதி அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்த காண்டீபன் என்பவர் 2011ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக சென்னை பெருநகர அசோக் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த 27.05.2021 மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் அவருக்கு இந்துமதி என்ற மனைவியும் மற்றும் தாய் தந்தை உள்ளனர். இறந்து போன கான்டீபன் குடும்பத்திற்கு 2011 ஆம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த அவரது நண்பர்கள் ஏற்படுத்தியுள்ள காக்க உதவும் கரங்கள் குழுவின் மூலமாக ரூபாய் 23,33,202/- வசூல் செய்யப்பட்டது. அந்தத் தொகையை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் இறந்துபோன போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினார்.

இந்நிகழ்வின் போது காண்டீபன் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட மேற்படி தொகையிலிருந்து மதுரை மாவட்ட ஆயுதப்படை வாகன பிரிவில் பணிபுரிந்து வரும் சையது அபுதாஹிர் என்பவருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய இருக்கிறார் என்ற விபரம் தெரிந்து, காண்டீபன் குடும்பத்தினர் தாமாக முன்வந்து ரூபாய் 2,00,000/-தொகையினை சையது அபுதாஹிர் அவர்களுக்கு வழங்கிய நெகிழ்ச்சியான தருணமும் நிகழ்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் 2011 ஆம் ஆண்டு காட்சி உதவும் கரங்கள் நண்பர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.