சொத்து தகராறில் அண்ணன் கொலை தம்பி உட்பட நால்வர் கைது
தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே சொத்துக்காக அண்ணனை கொலை செய்த தம்பி, சித்தி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் அருகே எ.காமாட்சிபுரத்தைச் சேர்ந்த சிங்காரவேலு மகன் செந்தில் ,50.நேற்று முன்தினம் அங்குள்ள குப்பைத் தொட்டியில் எரிந்த நிலையில் இவரின் உடல் கிடந்தது. டி.எஸ்.பி., முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் மீனாட்சி விசாரித்தனர். சிங்காரவேலு வின் முதல் மனைவி ராஜம்மாள் மகன் செந்தில் 50. ராஜம்மாள் கோபித்துக் கொண்டு வெளியூர் சென்றதால் சிங்காரவேலு, ரத்தினகிரியை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு செல்வகுமார் 42,சரவணன் உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர். சிங்காரவேலுவின் நடத்தை சரியில்லாததால் தனது பேரன் செந்தில் நலனுக்காக தாத்தா அன்னஞ்சி,நிலம் வீடு எழுதிவைத்துள்ளார். செந்திலுக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் வெளியூரில் இருந்த செந்தில் சில மாதங்களுக்கு முன் தனது பெயரில் உள்ள நிலத்தினை ரூ.4லட்சத்திற்கு விற்றுள்ளார்.
விற்ற பணத்தில் செல்வக்குமார்,சித்தி ரத்தினகிரி பங்கு கேட்டுள்ளனர். செந்தில் தர மறுத்துள்ளார் பணம் கொடுக்க மறுத்த செந்திலை அவரது வீட்டிற்கு சென்று செல்வகுமார் மது விருந்து கொடுத்துள்ளார். மதுவின் மயக்கத்தில் இருந்த செந்திலை,அரிவாளால் செல்வக்குமார் வெட்டி கொலை செய்தார். தடயங்களை மறைப்பதற்கு உடலை எரிக்க திட்டமிட்டனர்.
செல்வகுமார் தனது தாய் ரத்தினகிரி,தாய் மாமன் மகன் லோகநாதன், நண்பர் செல்வம், ஆகியோர் உதவியுடன் உடலை குப்பை தொட்டியில் போட்டு,பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். உடல் பாதிஅளவில் எரிந்தது. இதன்பின் போலீசாரின் விசாரணையில் சிக்கினர். செல்வகுமார், உள்ளிட்ட நால்வரையும் கொலை வழக்கில் வடகரை போலீசார் கைது செய்தனர்.-