சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்தவித சமரசமும் செய்யக்கூடாது என்று மதுரை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரக அளவிலான காவல்அதிகாரிகள் கலந்தாய்வுக்கூட்டம் தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றவழக்குகள், சமூகவிரோதிகளின் செயல்பாடுகள், அவர்கள்மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விபத்துகளை குறைப்பது, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் எந்தவித பார பட்சமும், சமரசமும் இன்றி நடவடிக்கை மேற் கொள்வது ஆகியவை தொடர்பாக, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உயர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன், போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திக் (ராமநாதபுரம்), செந்தில்குமார் (சிவகங்கை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, டி.ஜி.பி. சைலேந்திரபாபு ராமேசுவரத்துக்கு புறப்பட்டு சென்றார். வழியில் சாலையோரத்தில் உள்ள உச்சிப்புளி காவல் நிலையத்துக்குள் சென்றார். அங்கு, ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் சார்பு&ஆய்வாளர்கள் இருந்தனர்.
திடீரென டி.ஜி.பி. வருவதை கண்ட அவர்கள் பரபரப்படைந்தனர். அவர்களை அமைதிப்படுத்திய டி.ஜி.பி. வழக் குகள், ரவுடிகள் மீதான நடவடிக்கைகள் குறித்து காவல் நிலைய எழுத்தர் தியாகராஜனிடம் கேட்ட றிந்தார். தொடர்ந்து, ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆவணப் பராமரிப்பில் திருப்தியடைந்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு, எழுத்தருக்கு ரூ.1000 பரிசு அளித்து பாராட்டினார். பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் புறப்பட்டு சென்றார்.