Police Department News

மதுரை மாட்ட ஆயுதப்படை வாகன ஓட்டும் காவலருக்கு மாவட்ட காவல் துறையினர் மருத்துவ செலவு உதவி

மதுரை மாட்ட ஆயுதப்படை வாகன ஓட்டும் காவலருக்கு மாவட்ட காவல் துறையினர் மருத்துவ செலவு உதவி

மதுரை மாவட்ட ஆயுதப் படையில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் திரு. சையது அபுதாஹிர் முதல்நிலைக் காவலர் 559 என்பவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மேற்படி காவலரின் சிகிச்சைக்கு உதவும் பொருட்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர் ரூபாய் 2, 25, 350 ஐ சேகரித்துள்ளனர். இந்த நிதியினை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ. பாஸ்கரன் அவர்கள் மேற்படி காவலர் திரு சையது அபுதாஹிர் அவர்களிடம் சிகிச்சைக்காக இன்று வழங்கினார்கள்.

மேலும் மேற்படி காவலர் அவர்களின் சிகிச்சைக்காக அவருடன் 2011ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவல்துறை நண்பர்கள் சேர்ந்து ரூபாய் 2 லட்சத்தை அவருடைய சிறுநீரக சிகிச்சைக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மூலம் வழங்கியிருக்கிறார்கள்.

மேற்படி சிகிச்சைக்கான நிதியினை பெற்ற காவலர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.