Police Department News

உயிர் பாதுகாப்பு(தலைகவசம்) பற்றிய விழிப்புணர்வை திரு.சாம்பென்னட் (போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அவர்களால் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது.)

உயிர் பாதுகாப்பு(தலைகவசம்) பற்றிய விழிப்புணர்வை திரு.சாம்பென்னட் (போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அவர்களால் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது.)

திரு.நடராஜ் (போக்குவரத்து உதவி ஆணையாளர் மயிலாப்பூர் சரகம் அவர்கள் தலைமையில் மற்றும் திரு.சாம்பென்னட் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அவர்கள் ஏற்பாட்டில் தலைகவசம் பற்றிய விழிப்புணர்வு சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது.

இப்போது தான் கொரோனா ஒழிந்தநிலையில் வாகன ஓட்டிகளான கல்லூரி மாணவர்கள்,அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், ஆகியோர் தினம்தோறும் பணி மற்றும் காலேஜ் மற்றும் சில விஷேசங்களுக்கு இருசக்கர வாகனத்திலோ அல்லது காரிலோ பயணிக்கின்றனர்.இதில் பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகளான கல்லூரி மாணவர்கள் தலைகவசம் அணியாமல் செல்கின்றனர் அதனால் விபத்து ஏற்பட்டு உயிர் மற்றும் உடல்பாகத்தை இழந்து வாழ்வை இழக்கின்றனர்.ஆகையால் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை குறைப்பதற்காக ஆங்காங்கே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மற்றும் மோர் வழங்கியும் வருகின்றனர் இன்று 07.05.2022 காலை திரு.சாம்பென்னட் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அவர்கள் மயிலாப்பூர் லஷ் கார்னரில் தலைகவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளை கவுரவித்தும் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு தண்ணீர் மற்றும் தலைகவசம் அணியவேண்டும் என்று அறிவுரை வழங்கி அனுப்புகின்றனர்.இச்செயல்களை பற்றி பலரும் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.