மதுரையில் 5 காவல் ஆய்வாளர்கள் டி.எஸ்.பி,.யாக பதவி உயர்வு
தமிழகத்தில் டி.எஸ்.பி. பதவிகளுக்கான காலியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பு மூலமும், இடமாற்றம் மூலமும் நிரப்பப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகம் முழுவதும் 91 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான பணி நியமன உத்தரவை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் டி.எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்ற 91 பேரில் 5 பேர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
மதுரை திருநகர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள பிரபு திருவாரூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை துறை டி.எஸ்.பி. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
மதுரை மண்டல சி.ஐ.யூ. அமலாக்கபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள கென்னடி திருச்சி குற்றப்பதிவு பிரிவு போலீஸ் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மதுரை எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கன்னியா குமரி மாவட்ட மது கடத்தல் தடுப்பு பிரிவு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. மதுரை சிலைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மயிலாடுதுறை சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. டி.எஸ்.பி. பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
மதுரை தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக தமிழ்ச்செல்வன் ராமநாத புரம் போதைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உளவுத்துறை சி.ஐ.டி. டி.எஸ்.பி பணிஇடமாற்றம் வழங்கப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள 5 பேருக்கு, டி.எஸ்.பி பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.