Police Department News

மதுரை மாவட்டம் பணியின் போது சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து கீழ்க்கண்டவாறு செயல்பட்ட காரணங்களுக்காக அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.

மதுரை மாவட்டம் பணியின் போது சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து கீழ்க்கண்டவாறு செயல்பட்ட காரணங்களுக்காக அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.

1 மாவட்டங்களில் குண்டர் தடுப்புச் சட்ட கோப்புகளை விரைந்து தயார் செய்து சிறப்பாக பணி செய்தமைக்காக சார்பு ஆய்வாளர் திரு புதுராஜா என்பவருக்கும்

  1. மாவட்டங்களில் நிகழும் பாரி குற்ற வழக்குகளில் விசாரணை செய்து வழக்குகளை கண்டுபிடித்ததற்காக கொடுஞ்செயல் குற்றத்தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் திரு ஆனந்த் மற்றும் அவருடன் பணிபுரிந்த காவலர்கள் திரு ராமர் திரு முகமது யாசின் திரு பிரகாஷ் ஆகிய நான்கு நபர்களுக்கும் 3 அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா புகையிலை பொருட்கள் போன்ற விற்பனை பதுக்கல் போன்ற குற்றங்களை சிறப்பாக செயல்பட்டு கண்டுபிடித்ததற்காக தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு நாகநாதன் மற்றும் அவருடன் பணிபுரிந்த காவலர்கள் திரு சுப்பிரமணியன் திரு அருண் திரு கணபதி திரு மதிவாணன் திரு வயக்காட்டு சாமி திரு முத்து மற்றும் திரு சத்யராஜ் ஆகிய 8 நபர்களுக்கும்
  2. ஊமச்சிகுளம் உட்கோட்டம் சிலைமான் கருப்பாயூரணி ஒத்தக்கடை காவல் நிலையங்களில் தாக்கலான 17 திருட்டு மற்றும் கணக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரண்டு எதிரிகளை கைது செய்து அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 114 பவுன் தங்க நகைகள் மற்றும் களவு போன பொருட்கள் நீக்கப்பட்டு எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறப்பான பணியாற்றிய சிலைமான் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு காந்தி ஆகியோருக்கும்
  3. ஒத்தக்கடை காவல் நிலையத்தில் 16 வழக்குகளில் 12 வழக்குகள் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் 4 வழக்குகளை முடித்து சிறப்பான செயல்களை செய்த ஒத்தகடை காவல் நிலைய தலைமைக் காவலர் திரு மாணிக்கம் என்பவருக்கும்
  4. குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து நீதிமன்ற வழக்கு கோப்புகள் எடுக்க உதவியாக இருந்த மேலூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு கண்ணன் என்பவருக்கும்

7.கீழவளவு காவல் நிலையத்தில் உள்ள வழக்கு கோப்புகளை எழுதி விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உதவியாக இருந்த கீழவளவு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு முத்துக்குமார் என்பவருக்கும்

  1. தகவலின்பேரில் அரசால் தடை செய்யப்பட்ட 28 கிலோ போதை வஸ்துகள் மற்றும் ஒரு லாரி ஒரு கார் மற்றும் குற்றவாளிகளை கைது செய்த பெருங்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு கார்த்திகேயன் மற்றும் தலைமை காவலர் திரு லிங்கம் ஆகியோருக்கும்
  2. திருமங்கலம் நகர் காவல்நிலைய குற்ற எண் 137/22 பிரிவு 302 IPC எதிரியை கண்டுபிடித்து கைதுசெய்த சார்பு ஆய்வாளர்கள் திரு ராமகிருஷ்ணன் திரு மாரி கண்ணன் மற்றும் தலைமை காவலர் திரு ராஜா ஆகியோர்களுக்கும்
  3. தமிழக முதல்வர் வருகையின்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சம்பந்தமாக முதல்வரின் வாகனத்தை மறித்து மனு கொடுக்க முடிவு செய்ததை முன்கூட்டியே அறிந்து தகுந்த பாதுகாப்பு அளிக்க உதவியாக இருந்த நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு சிவக்குமார் சார்பு ஆய்வாளர் திரு அர்ஜுனன் மற்றும் முதல் நிலை காவலர் திரு பிரேம்நாத் ஆகியோருக்கும்
  4. நாகமலை புதுக்கோட்டை காவல்நிலைய குற்ற எண் 148/22 பிரிவு 294 பி, 324, 307 IPC வழக்கில் சிசிடிவி மூலம் எதிரியை கைது செய்தும் ஆட்டோவை கைப்பற்ற உதவியாக இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு முத்துப்பாண்டி மற்றும் காவலர் திரு முரளி தலைமை காவலர் திரு விஜயகுமார் காவலர் திரு கண்ணன் ஆகியோர்களுக்கும் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.