மதுரை,அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் அவர்களின் பெண்களுக்கான விழிப்புணர்வு
வீட்டுக்கு வெளியே அன்பைத்தேடி செல்லாதீர்
மதுரை, அண்ணாநகர் பகுதியில் நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை சார்பில் இளம் பெண்களுக்கான 5 நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கில் கடந்த 19.12.2020 ம் தேதி தொடங்கியது. இதில் மதுரை மாநகர் அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி.லில்லி கிரேஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இளம் பெண்கள் அனைவரும் தங்களின் பெற்றோர்களிடம் அன்பு செலுத்துங்கள். வீட்டுக்கு வெளியே அன்பைத்தேடி செல்லாதீர்கள்
பாரதி கண்ட புதுமைபெண்களாய் தைரியமுடனும் இலட்சிய இலக்கை அடைய கல்வி யில் கவனம் செலுத்த வேண்டும் என உரையாற்றினார்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி மாநிலச்செய்தியாளர்