Police Department News Police Recruitment

பொதுவாக காவல் நிலையத்திற்கு வரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லமுறையில் தீர்வு மட்டுமின்றி
ஆறுதலும் தரும் இடமாக இருக்க வேண்டும் என்பது அனைத்துதர மக்களின் சராசரி எதிர்பார்ப்பாகும் அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில்

விருதுநகர் மாவட்டம்

பொதுவாக காவல் நிலையத்திற்கு வரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லமுறையில் தீர்வு மட்டுமின்றி
ஆறுதலும் தரும் இடமாக இருக்க வேண்டும் என்பது அனைத்துதர மக்களின் சராசரி எதிர்பார்ப்பாகும் அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில்

காவல்துறை- பொதுமக்கள் நல்லுறவு சம்பந்தமாக நிறைய முயற்சிகள் மேற்கொள்ள பட்டுவருகின்றன.

காவல் துறையின் விடாமுயற்சியானது நல்லமுறையில் மக்களின் நலன் கருதி தினமும் ஏதாவது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி அல்லது ஏதேனும் நல்நிகழ்வுகள் என ஏதேனும் நடந்து கொண்டே இருக்கும்.

அதில் ஒரு வகை நிகழ்ச்சிதான் காவல் நிலையத்தில் நூலகம் என்பது படிப்பு யாவருக்கும் சொந்தம் என்பதை தெளிவுபடுத்தவே இந்நிகழ்ச்சியாகும்.

இம் மண்ணுலகில் யாரும் குற்றவாளியாக பிறப்பதில்லை, அவரவர்
சூழ்நிலையும், சமுதாய புறக்கணிப்பு, கனவு அழிப்பு,துரோகம், என நிறைய காரணங்களும் உண்டு,ஆனால் இவையனைத்தையும் ஏற்கமுடியாத ஒன்றாகும்.

அனைவரும் மனிதர்கள்தான் இதில் குற்ற எண்ணங்கள் கொண்டவரை தவிர
பாதிக்கப்பட்டவர்களை ஆசுவாசப்படுத்தவும்,ஓர் சட்ட தெளிவு பெறவும், வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு வாய்ப்பை உருவாக்குகின்ற உண்ணத இடமாகவும், புறக்கணிக்கப்பட்ட முதியோர்களுக்கு ஆதரவு கரமாகவும் , பெண் அடிமை சமுதாயத்தில் ஊறிப் போனவர்களை பிரித்தெடுக்கும் பகுப்பாளனாகவும்,
படிப்பில் ஆர்வம் உள்ள குழந்தைகள் தயக்கமின்றி வரும் கல்வி சாலையாகவும்,
வழிமாறிய இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், இந்த நூலகம் தன் பணியை சிறப்புடன் செய்யும் என நம்பிக்கையுடன் செயல்படும்.

புத்தக வாசிப்பு தன்னையும்,தன் குடும்பம் மற்றும் இந்த சமுதாயத்தையும் மாற்றிக் காட்டும் என்பதில் ஐயமில்லை.

வளரும் தலைமுறையினருக்கு வித்திடும் இந்த நல்ல
முயற்சியில்
சில ஏளனங்கள், புரணிகள், எதிர்மறை விமர்சனங்கள் இதையேல்லாம் தாண்டியே பயணம் செய்யவிருக்கின்றது.

இதில் அனைத்து சாமானிய மக்கள், இளைஞர்கள் , முதியவர்கள் மற்றும் போட்டி தேர்வாளர்கள் படித்து பயன்படும் வகையில் காரியாபட்டி காவல் நிலையத்தில் திருவள்ளுவர் நூலகம் திறப்பு விழாவானது

(16.07.2022) மாலை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகர் இ.கா.ப அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்கள் மற்றும் காரியாபட்டி வட்ட காவல் ஆய்வாளரான திரு.செந்தில்குமார் அவர்கள், பத்திரிகை நண்பர்கள்,
ஊர் முக்கியஸ்தர்கள்,
தொண்டு நிறுவனங்கள் ,
புத்தகம் வழங்கி சிறப்பித்த நல்உள்ளங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சார்பு ஆய்வாளர்கள்,சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.