Police Department News

சென்னையில் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அதிரடி நடவடிக்கை

சென்னையில் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அதிரடி நடவடிக்கை

சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை காவல் துறை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் பல் வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக குற்றப்பிண்ணனி கொண்ட நபர்களை ஒடிக்கி குற்ற குற்றமில்லாத நகரமாக மாற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றப்பிண்ணணி உள்ள நபர்களுக்கு எதிரான சிறப்பு தணிக்கைகக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து காவல் நிலைய போலிசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக இனி குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் திருந்தி வாழப் போகிறேன் என நன்நடத்தை பிணையப் பத்திரம் எழுதி கொடுத்த 454 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டனர் மேலும் அவர்களிடம் போலிசார் நேரில் சென்று .விசாரணை மேற்கொண்டனர். மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இது குறித்து காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கூறும் போது சென்னை பெரு நகர காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவே குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேவைப்பட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.