மாநில அளவிலான தமிழ்நாடு மாஸ்டர் தடகள விளையாட்டு போட்டியில் காவல்துறை சார்பில்¸சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி.வனிதா என்பவர் சங்கிலி குண்டு எறிதலில் மூன்றாம் இடமும்¸ மும்முறை தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும் பிடித்தார். இவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தற்போது விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று வருகிறார். மேலும் சேலம் மாநகர, தெற்கு போக்குவரத்து தலைமை காவலர் திரு.டோமினிக் சாவியோ என்பவர் சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டு முதல் இடம் பிடித்தார். வெற்றிபெற்ற காவல் ஆளிநர்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.செந்தில்குமார் இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.