Police Department News

செயின் பறிப்பு வழக்குகளில் ஈடுபட்ட மூவர் கைது 15 1/2 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

கடந்த 07.11.2019 மற்றும் 15.11.2019 ஆகிய இரண்டு தினங்களில் E3-அண்ணாநகர் காவல் சரகத்திற்குட்பட்ட யாகப்பா நகர், எம்.ஜி.ஆர் தெருவில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7 சவரன் தாலி சங்கிலி மற்றும் 1 ½ சவரன் வளையலையும் பறித்து சென்றனர் மற்றும் மதுரை யாகப்பா நகர், சர்ச் ரோடு எதிரில் நடந்து சென்றுகொண்டடிருந்த பெண்ணிடம் 7 சவரன் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பறித்து சென்றதாக E3 அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு. சங்கர்கண்ணன் அவர்கள் இவ்வழக்கை புலன்விசாரணை செய்தார். காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை விரைவில் பிடிக்க உத்தரவு பிறப்பித்தார் காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படியும் காவல் துணை ஆணையர் குற்றம் திரு.பழனிகுமார் அவர்களின் மேற்பார்வையிலும், காவல் உதவி ஆணையர் திரு.வினோஜி அவர்களின் நேரடிக்கண்காணிப்பிலும், அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு சங்கர்கண்ணன் அவர்கள்தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் காவல் உதவி ஆய்வாளர் திரு. செந்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பன்னீர்செல்வம் தலைமை காவலர்கள் திரு.போஸ், திரு. கண்ணன், திரு விஜயசீலன், திரு வெங்கட் மற்றும் ஆயுதப்படை காவலர் சசிகுமார் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் நேற்று மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட மதுரை, சக்கிமங்கலம் பசும்பொன் நகரை சேர்ந்த ஆதீஸ்வரன் 20/19, த/பெ. கருப்பசாமி, மதுரை, சக்கிமங்கலம், புதுத்தெருவை சேர்ந்த கார்திக் கண்ணன் @ பரதன் 21/19, த/பெ. கணேசன், மற்றும் மதுரை, பழங்காநத்தம், கோவலன் நகரை சேர்ந்த யோகராஜ் 20/19, த/பெ. போஸ் ஆகிய மூன்று நபர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது மூவரும்தான் என உறுதிசெய்யப்பட்டது. எனவே மூவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து 15 ½ சவரன் நகை மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவர்கள் மூவர் மீதும் ஒன்பது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் 3 வழக்குகளும், மதுரை மாவட்டம் கருப்பாயூரணி காவல்நிலையத்தில் 2 வழக்குகளும், மதுரை மாநகர் E1புதூர் காவல்நிலையத்தில் 2 வழக்குகளும்,E3 அண்ணாநகர் காவல்நிலையத்தில் 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.