திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கபதக்கம் வென்றார்
மதுரை மாநகர் தலைமை காவலரின் மகன். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு தங்கம் நான்கு வெண்கலப் பதக்கம் பெற்று தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே நடைபெற உள்ள துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள த.கா. பாலசுப்ரமணியன் அவர்களின் மகன் B.SHRIMAN க்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 53). விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகை முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த […]
தென்காசி அருகே குழந்தை பிறந்த 1½ மாதத்தில் இளம்பெண் தற்கொலை தென்காசி அருகே உள்ள ஆய்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ரம்யா என்ற மகள் உள்ளார்.கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரம்யாவை சுரண்டை அருகே உள்ள ராஜ கோபாலபேரியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து கர்ப்பமான அவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.இந்நிலையில் நேற்று பெற்றோர் வீட்டுக்கு சென்ற ரம்யா, வீட்டில் […]
வங்கி லிப்டில் சிக்கிய வாலிபர் தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்க்கப்பட்டார் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள தளவாய் தெருவில் இந்தியன் பேங்க் உள்ளது இங்குள்ள லிஃப்ட்டில் உள்ளே நபர் ஒருவர் சிக்கி கொண்டார் தகவல் அறிந்த மீனாட்சியம்மன் கோவில் தியணைப்பு நிலைய அலுவலர் விரைந்து சென்று லிப்டில் சிக்கி கொண்ட நபரை பத்திரமாக மீட்கப்பட்டார் .