மதுரை மாநகர் அவனியாபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மீனாட்சிநகர் எம்.ஜி.ஆர் தெருவில் நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் ஓர் கும்பல் போதையில் ரகளையில் ஈடுபட்டனர். சுமார் 20 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 காரை அடித்து சேதப்படுத்தினர். மேலும் அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரையும் அடித்து காயப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் மின்சாரம் தாக்கி இறந்த மூன்று காட்டு யானைகளுக்கு 21-வது நாள் காரியம் செய்த ஊர்மக்கள்* தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் கடந்த 20-நாட்களுக்கு முன்பு முருகேசன் என்பவரின் விவசாய நிலத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த ஒரு பெண் யானை 2 ஆண் யானை என மூன்று காட்டு யானைகள் எதிர்பாராதவிதமாக விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த விபத்து […]
இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட்: உயா்நீதிமன்றம் உத்தரவு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரு பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலக நேரடி உதவி பிரிவு அதிகாரிகளுக்கு கூடுதல் இயக்குநா்களாக பதவி வழங்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி பதவி உயா்வு கோரியிருந்தவா்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடா்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த […]
16 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று 8 மாத கர்ப்பிணியாக மாற்றிய லாரி டிரைவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் தம்பதியின் 16 வயது மகள், திருமோகூர் பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பை கடந்த ஆண்டு படித்து முடித்தார். மேற்படிப்பு படிக்க விரும்பியபோதும், குடும்ப வறுமையால் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதன்படி தனக்கு தெரிந்த நபரின் பரிந்துரைப்படி அங்குள்ள ஒரு […]