Police Department News

தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஐ.ஜி.அஸ்ரா கார்க் செய்திளர்களுக்கு பேட்டி

தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஐ.ஜி.அஸ்ரா கார்க் செய்திளர்களுக்கு பேட்டி

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது

பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். தென் மாவட்டத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் வினியோகம் செய்ய வேண்டாம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுத்தப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான நபர்களின் வீடுகள், அலுவலகங்கள், தொழில் செய்யும் இடங்களில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி. தலைமையில் இரவு ரோந்து பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.