Police Department News

திருச்சியில் 48 மணி நேரத்தில் 82 ரவுடிகள் அதிரடி கைது

திருச்சியில் 48 மணி நேரத்தில் 82 ரவுடிகள் அதிரடி கைது

தமிழக காவல்துறை இயக்குநர் திரு சைலேந்திரபாபு அவர்களின் மேலான உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள், சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க 48 மணி நேரம் ரவுடி மின்னல் வேட்டை-ன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், ரவுடிகள், அவர்கள் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதன்படி, திருச்சி மாநகரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், கொலை குற்றவாளிகள், தொடர்ந்து குற்றம் செய்யும் குற்றவாளிகள், கெட்ட நடத்தைக்காரர்கள் என 82 நபர்களை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பொது அமைதியை பேணிக்காப்பத்தற்கும், நன்னடத்தை பிணையம் பெற வேண்டி 56 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், கொலை, கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 20 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும், தலைமறைவாக இருந்து வந்த பிடியாணை குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்து ஆக மொத்தம் 82 நபர்களை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு இதுபோன்ற தொடர்ந்து அதிரடி வேட்டை செய்து, குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.