மதுரையில் செல்லூர் குலமங்களம் இணைக்கும் பல்லாங்குழிச்சாலை சரி செய்யப்படுமா?
மதுரை மாநகர் செல்லூர்-குலமங்கலம் இணைப்பு முக்கிய சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வானங்களில் மக்கள் பயணிக்கின்றனர் நீண்ட நாட்களாக வைகை பெரியார் கூட்டு குடிநீருக்காக தோண்பட்டதில் ஆங்காங்கே மெகா பள்ளம் உள்ளது இச்சாலை மக்கள் பயன்படுத்த தகுதியில்லா சாலையாகவும் விபத்துக்களை ஏற்படுந்தும் வகையில் பல்லாங்குழி சாலையாக உள்ளது.இந்த சாலை வழியாகத்தான் மக்களை தேடி மருத்துவ வாகனங்களும், ஆம்புலென்ஸ் வாகனங்களும் வர வேண்டிய சூழல் உள்ளது கனரக வாகனங்களும், வேன்களும், இருசக்கர. வாகன ஓட்டிகளும் இச்சாலையில் கடந்து செல்லும் போது தினந்தோறும் வாகன விபத்துகள் நடைபெறுகிறது இது போக இச்சாலையில் ஷேர் ஆட்டோ ஓர்க்சாப், மற்றும் கடைக்காரர்களும் ரோட்டை மறித்து ஆக்கிரமிப்பு செய்து கொள்கிறார்கள்
மேலும் பள்ளி கல்லூரி வாகனங்களும் நிலை தடுமாறுகின்றன மெகா பள்ளம் சேரும் சகதியுமாக இருப்பதால் இவ்வழியில் வாகனாங்களை ஓட்ட தவிக்கிறார்கள் இது போக பாதாள சாக்கடை மூடி உடைந்து அதுவேற பள்ளம் உள்ளது அதில் உள்ளே விழுந்து கை கால் உடைந்து செல்கிறார்கள் இச்சாலை வழியாகதான் பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் செல்ல வேண்டியதுள்ளது மற்றும் தத்தனேரி மயானகரைக்கு செல்ல வேண்டிய வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் இது புறநகர் பகுதியை நகர பகுதியில் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளதால் இப்போதைக்கு குண்டும் குழியுமான சாலையில் மண்ணை போட்டு மூடி ஜல்லிகற்கலை நிறப்பி தற்காலிக நிவாரணமாவது செய்யலாம் அதுவும் நடக்கவில்லை இச்சாலைக்கு எப்போது விடிவுகாலம் வரும் என பொதுமக்கள் அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் மதுரை மாநகராட்சியை குறை கூறி கொண்டே செல்கிறார்கள் வேதனையில் பொதுமக்கள் உள்ளனர்
ஆகவே இச்சாலையை சரி செய்திட இந்த பகுதியில் வசிக்கும் நீர் நிலைகள் பாதுகாப்பு நிறுவனர் திரு. அபுபக்கர் பொதுமக்களும் சமூக ஆர்வளர்களும் கேட்டுக்கொள்ளுகிறார்கள்