அப்பாவை அதிகம் நேசித்த மெசேஜ்கள்!’ -மாணவி பாத்திமாவின் லேப்டாப், செல்போனை ஆய்வுசெய்த போலீஸ்
சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா பயன்படுத்திய செல்போன், லேப்டாப் ஆகியவை அன்லாக் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாத்திமா லத்தீஃப் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் பல்வேறு சட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார். ஆரம்பத்தில் இந்த வழக்கை சென்னை கோட்டூர்புரம் போலீஸார் விசாரித்தனர். தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பாத்திமா லத்தீஃப் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் பல்வேறு சட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார். ஆரம்பத்தில் இந்த வழக்கை சென்னை கோட்டூர்புரம் போலீஸார் விசாரித்தனர். தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
விடுதியிலிருந்து மாணவி பாத்திமாவின் செல்போனை போலீஸார் கைப்பற்றினர். அந்த செல்போனில் பாத்திமா எழுதியிருந்த சில தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. `பாத்திமா பயன்படுத்திய செல்போன், லேப்டாப் ஆகியவற்றை தங்களின் முன்னால்தான் போலீஸார் ஓப்பன் செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டு நீதிமன்றத்தின் மூலம் அனுமதியைப் பெற்றார் அப்துல் லத்தீஃப்.
இதையடுத்து, இன்று காலை பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப், சகோதரி ஆயிஷா ஆகியோர் தமிழக காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் செயல்படும் தடயவியல் துறைக்கு வந்தனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியும் அங்கு வந்தார். காவல்துறை அதிகாரிகள், பாத்திமாவின் குடும்பத்தினர் ஆகியோர் முன்னிலையில் செல்போன், லேப்டாப்களை தடயஅறிவியல் துறையினர் ஓப்பன் செய்தனர். பாத்திமாவின் செல்போன், லேப்டாப்பின் ரகசிய நம்பர்கள் அவரின் சகோதரி ஆயிஷாவுக்கு தெரியும் என்பதால் எளிதாக அவைகள் ஓப்பன் செய்து பார்க்கப்பட்டன.
இந்த வழக்கில் முக்கிய தடயமாக பாத்திமாவின் செல்போன், லேப்டாப் ஆகியவை உள்ளது. இதனால், அதில் உள்ள தகவல்களை காவல்துறையினர் ரகசியமாக வைத்துள்ளனர்.
மாணவி தற்கொலை வழக்கை விசாரித்து வரும் குற்றப் பிரிவு போலீஸாரிடம் பேசினோம். பாத்திமா வழக்கை முதலில் விசாரித்த கோட்டூர்புரம் போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்ற அனுமதியோடு பாத்திமாவின் லேப்டாப், செல்போன் ஆகியவை இன்று ஓப்பன் செய்யப்பட்டன. ஏற்கெனவே பாத்திமா, தன்னுடைய செல்போனில் தற்கொலைக்கு முன் எழுதிவைத்த தகவல்களோடு கூடுதல் விவரங்கள் ஏதேனும் உள்ளதா என்று ஆய்வு செய்துவருகிறோம். பாத்திமா, அவரின் அப்பா அப்துல் லத்தீஃப்பை அதிகமாக நேசித்துள்ளார். இதுதொடர்பான, மெசேஜ்களும் அதிகப்படியாக உள்ளன. இருப்பினும், ஆய்வுக்குப்பிறகுதான் எதையும் சொல்ல முடியும்" என்றனர். பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னை மத்திய குற்றப்பிரிவின் விசாரணை அதிகாரியைத்தான் நானும் என் குடும்பமும் நம்பியிருக்கிறோம். என் மகளுக்கு நடந்தது போல இனி யாருக்கும் நடக்கக்கூடாது. விசாரணையின் முடிவில் என் மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என முழுமையாக நம்புகிறேன். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை முறை திருப்தி அளிக்கிறது” என்றார்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்