Police Department News

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம்: நகை பறிப்பு- வழிப்பறியில் ஈடுபடும் சமூக விரோதிகள்

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம்: நகை பறிப்பு- வழிப்பறியில் ஈடுபடும் சமூக விரோதிகள்

மதுரையில் உள்ள முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக பவுர்ணமியன்று ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வது உண்டு.

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் பால்சுணை கண்ட சிவன் கோவில் மற்றும் அரசு சுற்றுச்சூழல் பூங்கா, மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழி உள்ளது. இங்கு தினமும் திரளானோர் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவிற்கு மதுரை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.

விசேஷ நாட்கள் தவிர மற்ற நேரங்களில் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் ஆட்கள் நடமாட்டம் மிக மிக குறைவாக இருக்கும். போலீசாரும் கண்டு கொள்ளாததால் அந்தப்பகுதி தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

மது, கஞ்சா அடித்து சுற்றித்திரியும் இவர்கள் அந்த வழியாக செல்லும் நபர்களை குறிவைத்து பணம், நகை, செல்போன் பறிப்பு போன்ற செயல்களில் துணிகரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் செல்லவே அச்சமடைந்துள்ளனர். போலீசார் தீவிர ரோந்து சென்று சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.