மது குடித்து வாகனம் ஓட்டும் ஓட்டுனருக்கு 10,000- ரூபாய் அபராதம். அவர் பின்னால் அமர்ந்து பயனிப்பவருக்கும் 10,000/- அபராதம் என்பது சரியா?
புதிய மோட்டார் வாகனச்சட்டத்தில் இரண்டு சக்கரம் மூன்று சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டும் நபருக்கு மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185 ன்படி ரூ.10,000/- அபராதம் என குறிப்பிட்டுள்ளது இது மிக சரியானதுதான். அதே சமயம் பின்னால் அமர்ந்து பயனிப்பவர்களுக்கும் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 188 ன்படி 10,000/- ரூபாய் அபராதம் என்பது சரியா என்பது பொது மக்களின் கேள்வியாக உள்ளது. இரண்டு சக்கர மூன்று சக்கர நான்கு சக்கர வாகனத்தில் ஓட்டுனர் மது குடித்து விட்டுத்தான் வாகனம் ஓட்டுகிறார் என்பது பின்னால் அமர்ந்து பயனிப்பவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் மோட்டார் வாகன சட்டம் பிரிவு 188 ன்படி பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஓட்டுனரை குடிக்க தூண்டி விட்டதாக கூறி அவர்களுக்கும் 10,000/- ரூபாய் அபராதம் விதிப்பதென்பது சரியா? என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
அப்படி பார்த்தால் மது கடைகள் திறந்திருப்பதால்தானே மது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுகிறார்கள் அப்போ மது கடைகாரர்களும் மது குடித்து விட்டு வாகனங்களை ஓட்ட தூண்டுகிறார்களா? அவர்களுக்கும் ரூ.10,000/- அபராதம் விதிக்கலாமா? என பொதுமக்களும் சமூக ஆர்வளர்களும் கேட்கிறார்கள்