மாரண்டஅள்ளியில் புதிய தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமிராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் துவக்கி வைத்தார்.
தருமபுரிமாவட்டம் மாரண்டஅள்ளியில் நடைபெறும் திருட்டு, செயின் பறிப்பு, பிக்பாக்கெட், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றசம்பங்களையும் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நகரின் முக்கிய பகுதிகளில் கேமராக்களை பொருத்த மாரண்டஅள்ளி காவல்துறை தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில் அப்பகுதியை சேர்ந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் செல்வம் மற்றும் தொழிலதிபர்கள் வெற்றி, சரவணன், கேபிள் ராஜா ஆகியோரின் உதவியுடன் நகரின் முக்கிய பகுதிகளான பேருந்துநிலையம், நான்குரோடு, பழைய பஸ் நிலையம், ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மல்லாபுரம்சாலை மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் 7இடங்களில் 26கண்காணிப்பு கேமிரக்கள் பொருத்தப்பட்டு கேமராக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழா நிகழ்ச்சி மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் நடைப்பெற்றது,
இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச் செல்வன் திறந்து வைத்து பேசியதாவது
தற்போது குற்றசம்பங்களை தடுக்க மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு மோமிரக்கள் பொருத்தப்படுகின்றது. ஆனால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஆன்ட்ராய்டு போன் மூலம் பாலியல் குற்றங்கள், பணம் மோசடி என கடந்தாண்டை விட பல்வேறு குற்றசம்பங்கள் அதிகரித்து வருகின்றன, தொழில் நுட்பத்தை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், தவறான செயல்களுக்கு பயன்படுத்த வேண்டாம் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் சிந்து, இன்ஸ்பெக்டர் ஜாபர்உசேன், பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக்கனி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.