மதுரையில் போதைக்கு எதிரான ஒரு கோடீ கையெழுத்து இயக்கம் மதுரை மாநகர் காவல் ஆணையர் முதல் கையெழுத்து போட்டு துவங்கி வைத்தார்
மதுரை தெற்கு வாசலில் DYFI சார்பில் போதைக்கு எதிரான போதையற்ற தமிழ்நாடு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மதுரை தெற்கு வாசல் பள்ளிவாசல் அருகே இன்று மாலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ( DYFI ) சார்பில் போதைக்கு எதிரான போதையற்ற தமிழ்நாட்டுக்காக 1 கோடி கையெழுத்து இயக்கம் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் முதல் கையெழுத்தையிட்டு தொடங்கி வைத்தார்.
இதில் அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேல்,அரசு வழக்கறிஞர், துணைமேயர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.