Police Department News

போதை இல்லா தமிழகம் அமைய போராடும் தேசபக்தி மிகுந்த இனைஞர்கள்

போதை இல்லா தமிழகம் அமைய போராடும் தேசபக்தி மிகுந்த இனைஞர்கள்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக தமிழ்நாட்டில் பிப்ரவரி 12 முதல் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை துவங்கி இருக்கிறது.  தற்போது நடைபெறும் அனைத்து சமூக குற் றங்களுக்கும் “போதை” என்பது பின்புலமாக இருக்கிறது.உலக வர்த்தகத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் தொழிலில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் போதை பொருள் கடத்தல் கொடிகட்டி பறக்கிறது.போதை வஸ்துகளான கஞ்சா, கோகைன்,பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, ஒயிட்னர் மது என பல வகைகளில் போதை பொருள்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐநா சபையின் துணை அமைப்பான பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சில் உதவியுடன், 1961இல் போதைப் பொருள் மருந்து ஆணை யம் மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் 141 போதை மருந்து கள் உலக அளவில் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச  போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (INCB) அறி வித்தது. 2022இல் ப்ரோஃவின், மெட்டோனிடசீன் ஆகி யவை போதை மருந்து பட்டியலில் புதிதாக இணைக்கப் பட்டுள்ளன. இப்படி ஆண்டுக்கு ஆண்டு புதிய பெயர்க ளில் போதை மருந்துகள் அதிகரிக்கின்றன.

இந்தியாவில் கடல் வழியாக துறைமுகங்களுக்கு ஹெராயின் போன்ற போதைப் பொருள்கள் சட்ட விரோத மாக இறக்கப்பட்டு, இந்தியாவுக்குள் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, மறைமுகமாக இளைஞர்களு க்கு விற்கப்படுகின்றன. இதில் குறிப்பாக குஜராத் வழி யாக துறைமுகங்களுக்கு அதிக அளவு போதைப் பொருள்கள் வருகின்றன. கடந்த ஆண்டு அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் 3000 கிலோ ஹெராயின் 2 கண் டெய்னர் மூலமாக ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இறக்கும் பொழுது போதைப்பொருள் தடுப்பு பிரிவால் பிடிக்கப்பட்டதை நாம் மறக்க முடியாது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21,000 கோடியாகும். இதற்கு  காரணம் பல துறைமுகங்கள் தனியார் கட்டுப்பாட்டில் விட்டதுதான்.  இப்பொழுது பிடிபட்ட போதைப் பொருள் மிகப்பெரிய  அளவாக சொல்லப்படும் நிலையில், 2017ஆம் ஆண்டு ரூ.3,500 கோடி மதிப்புடைய 1500 கிலோ ஹெராயின், ஜனவரி 2020இல் ரூ.175 கோடி மதிப்புடைய போதைப் பொருள் ஆகியவை குஜராத் வழியாக கொண்டு செல்லும் போது பிடிபட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 150 கோடி மதிப்புள்ள கஞ்சா பிடிபட்ட நிலையில், தற்போது இரண்டு கண்டெய் னர்களில் வந்த 3 டன் போதை மருந்து பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 9000 கோடி ரூபாய் என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் இராமநாத புரம் வேதாளை பகுதியில் இலங்கைக்கு நாட்டுப் படகு மூலம் 20 லிட்டர் வீதம் முப்பது கேன்களில் ரூ.360 கோடி சர்வதேச மதிப்புள்ள கோகைன் என்ற போதைப்  பொருள் பிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க திட்டத்தை தீட்டி காவல்துறை 2.0 கஞ்சா ஒழிப்பு திட்டம் என்கின்ற திட்டத்தை செயல் படுத்தி வருகிறது. போதைப் பொருள் விற்பனை/கடத்தலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களையும் முடக்கி  வருகிறது. எனினும் தமிழ்நாடு மட்டும் முயன்றால் அதை  நிறுத்த முடியாது. ஒன்றிய அரசும்இந்தத் திசையில் முழுமையாகச் செயல்பட வேண்டும். இன்று உலகம் முழுவதும் 30 கோடி பேர் போதைக்கு அடிமையானவர்களாக இருக்கின்றனர். இதில் 85 சதவீதம் படித்தவர்கள். அதில் 75சதவீதம் இளை ஞர்களே. இன்று ஒருவன் போதைக்கு அடிமையாகும் பொழுது முதலில் தன் வீட்டிலேயே பொருள்களை திரு டுபவனாக மாறுகிறான். அடுத்து வெளியே செல்லும் பொழுது போதைக்காக வழிப்பறி,திருட்டு, கொலை செய்யும் அளவுக்கு செல்லக்கூடியதாக  நிலைமை உள்ளது. சிறார்கள், இளைஞர்கள் செய்யும் குற்றங்க ளுக்கு பின்னால் போதை இருக்கிறது. போதையில்  இருக்கும் தகப்பனுக்கு காமம் தலைக்கேறி தன் குழந் தையை வல்லுறவு செய்த கொடுமை கூட நடந்து இருக்கி றது. தொடர் விபத்து பலிகளுக்கு காரணமாக மது எனும் போதை காரணமாக உள்ளது. பள்ளி, கல்லூரி வளாகங்களிலும், பல இடங்களிலும் போதை மருந்துகள் விற்கப்பட்டு மாணவர்களை போதைக்கு அடிமையாக்க பல கும்பல் செயல்பட்டு வரு கிறது. இதனால் மாணவர்கள் தவறான பாதைக்கு சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இப்படி பல சம்பவங்கள் நடப்பதையும் கைது செய்யப் படுவதையும் நாம் பார்க்கிறோம். இவர்களை கண்கா ணித்து தடுக்க அரசும், காவல்துறையும் கூடுதல் நட வடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இச்சூழலில்தான் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நாட்டின் சமூக, பொரு ளாதார முன்னேற்றத்திற்கு ஆணிவேர்களாக விளங்கக் கூடிய இளைஞர்களும், வருங்கால சந்ததியினரும் போதை பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. 

கள்ளச் சாராயத்திற்கு எதிராக போராடி 30 ஆண்டு களுக்கு முன்பாகவே விருது நகரில் சந்துரு, கடலூரில் குமார், ஆனந்தன் போன்ற தன் தோழர்களை இழந்த இயக்கம் வாலிபர் சங்கம் அந்த மாபெரும் இயக்கம்தான், இந்த  கொடிய போதை பழக்கத்தை ஒழிப்பதற்கு தமிழ்  நாட்டில் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துவக்கியுள்ளது. சுதந்திர போராட்ட வீரர் தோழர் சங்கரய்யா அவர்களி டம் துவங்கி கலைத்துறையில் ஜொலிக்கக் கூடிய  கலைஞர்கள், இயக்குநர்கள், பாடல் ஆசிரியர்கள், பத்தி ரிகை ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் என பலரையும் சந்தித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் வீதிக்கு வீதி, கிராமம் தோறும், நகரம் தோறும் கல்லூரி, பள்ளி வளாகங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும் மாணவர்களையும், இளைஞர்களையும், பொது மக்களையும் சந்திக்க வருகிறது.

நன்றி.
தோழர். பாலகிருஷ்ணன் அவர்கள்
 

Leave a Reply

Your email address will not be published.