மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகுந்த சாரைப் பாம்பு லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்
மதுரை கலெக்டர் அலுவலகத்தின் சுற்றுப்புற பகுதிகளில் குப்பை கூளங்கள் அதிகம் தேங்கிக் கிடந்தன. இதையடுத்து அங்கு சுத்தம்- சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் அனீஸ் சேகர் உத்தரவிட்டார். இதன்படி மாநகராட்சி ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக அங்கு பாழடைந்த கட்டடத்தின் அருகே குப்பை கூளங்களை அகற்றும் பணி இன்று காலை நடந்து வந்தது. அப்போது குப்பையில் இருந்து திடீரென ஒரு பாம்பு வெளிப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள், இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் தல்லாகுளம் தீயணைப்பு அலுவலர் (போக்குவரத்து) வேல்முருகன் தலைமையில் வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அரை மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு, கட்டிட இடிபாடுகளில் சாரை பாம்பு மறைந்து கிடப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தல்லாகுளம் தீயணைப்பு படை வீரர்கள் அந்த பாம்பை உயிருடன் லாவகமாக பிடித்தனர்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பிடிபட்ட பாம்பு சாரை வகையைச் சேர்ந்தது. தீயணைப்பு வீரர்கள் அதனை வனத்து றையிடம் ஒப்படைப்ப தற்காக எடுத்துச்சென்றனர்.