Police Department News

அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம்

அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம்

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில்முனை வோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் (PACCS), தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் (VLE) மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகிறது. மேலும் மின்னணு சேவைகளை குடிமக்க ளுக்கான பொது இணைய தளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது.

இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது இந்த திட்டத்தின் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ- சேவை மையங்கள் தொடங்கி பொது மக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமை யிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கமானது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

மேலும் இ-சேவை வலைத்தளத்திலிருந்து (www.tnesevai.tn.gov.in/ www.tnega.tn.gov.in) என்ற இணைய வழி சேவைகளை மக்களுக்கு வழங்கும் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் இத்திட்டத்தில்” பயன்பெற விண்ணப்பதாரர்கள் 15.3.2023 முதல் 14.4.2023 இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3 ஆயிரமும், நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரமும் ஆகும். இ-சேவை மையம் தொடங்க அனுமதிக்கப்படு பவர்களுக்கு பயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID&Password) விண்ணப்பித்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.