Police Department News

கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வரும் பாழடைந்த காவலர் குடியிருப்பு

கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வரும் பாழடைந்த காவலர் குடியிருப்பு

நிலக்கோட்டை இ.பி.காலனி, ஆனந்தன்நகர், புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து சைக்கிள், மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடிச்செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இவ்வாறு திருடப்பட்ட பொருட்களை பாழடைந்த காவலர் குடியிருப்பில் பதுக்கி வைத்து சில நாட்கள் கழித்து அதனை விற்றுவிடுகின்றனர். நேற்றுஇரவு ஆனந்தன்நகரை சேர்ந்த அதிகாரி ஒருவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து ஒரு மோட்டார் திருடப்ப ட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் கொள்ளையர்கள் காவலர் குடியிருப்பை தங்கள் வசிப்பிடமாக மாற்றியுள்ளனர். இங்கு விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதும், தாங்கள் திருடிய பொரு ட்களை பதுக்கி வைக்கும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே போலீசார் இந்த காவலர் குடியிருப்பை இடித்து தரைமட்டமாக்கி கொள்ளையர்களின் அட்டகாசத்தை கட்டு ப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பகல் நேரங்களில் இந்த சாலையை கடக்கவும், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே தற்காலிக நடவடிக்கையாக இங்கு வேறுயாரும் வராத வகையில் வேலி அமைக்க வாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.